தமிழ் தர்க்கம் யின் அர்த்தம்

தர்க்கம்

பெயர்ச்சொல்

 • 1

  விவாதம்; வாக்குவாதம்.

  ‘காலையில் மனைவியோடு சின்ன தர்க்கம்’
  ‘புதிய நாடக உத்தியைப் பற்றி அவர்களுக்கு இடையே தர்க்கம் நடந்தது’

 • 2

  காரணகாரிய அடிப்படையில் படிப்படியாக விவாதங்கள் அமைத்து ஒரு கூற்றை நிறுவும் முறை.

தமிழ் தீர்க்கம் யின் அர்த்தம்

தீர்க்கம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வரும்போது) தெளிவு; உறுதி.

  ‘இது தீர்க்கமாக ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவு’
  ‘அவருடைய தீர்க்கமான கருத்து’
  ‘தீர்க்கமான அறிவும் புத்திக் கூர்மையும் உடையவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும்’
  ‘தீர்க்கமான சிந்தனையாளர்’

 • 2

  (பார்வையைக் குறித்து வரும்போது) கூர்மை.

  ‘ஆகாயத்தைத் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு இன்று மழை வரும் என்றார்’
  ‘அவர் பார்வையில் இருந்த தீர்க்கம்’