தமிழ் தரப்பு யின் அர்த்தம்

தரப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (வழக்கு, போர், பேச்சுவார்த்தை முதலியவற்றில்) எடுத்த நிலையின் அடிப்படையில் மற்றவரிடமிருந்து அல்லது மற்றவற்றிடமிருந்து வேறுபட்டுத் தெரியும் பிரிவு.

  ‘இரு தரப்புப் பிரதிநிதிகளும் பிரச்சினைகளைப் பேசித் தீர்த்துக்கொள்வது நல்லது’
  ‘முத்தரப்பு மாநாடு’
  ‘அரசுத் தரப்பு வழக்கறிஞர்’
  ‘உங்கள் கட்சியின் தரப்பில் யாரைத் தேர்தலில் நிறுத்தப்போகிறீர்கள்?’
  ‘உன் தரப்பில் பேச யாரும் இல்லையா?’

 • 2

  ஒன்றுக்கு மேற்பட்டவர் அடங்கிய பெரும் பிரிவு அல்லது உட்பிரிவு.

  ‘பல தரப்பு மக்களும் இந்த வருட வரவுசெலவுத் திட்டத்தை வரவேற்றிருக்கிறார்கள்’

தமிழ் தீர்ப்பு யின் அர்த்தம்

தீர்ப்பு

பெயர்ச்சொல்

 • 1

  நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் இருதரப்பு வாதங்கள், சாட்சியங்கள் போன்றவற்றை விசாரித்துச் சட்டப்படி நீதிபதி வழங்கும் முடிவு.

  ‘உயர் நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்’
  உரு வழக்கு ‘தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம்’

 • 2

  (பொதுவாக) ஒன்றை ஆராய்ந்து தெரிவிக்கும் முடிவு.

  ‘இறக்குமதி செய்யப்பட்ட அந்த இயந்திரங்கள் பழுதானவை என்பதே நிபுணர்களின் தீர்ப்பு’
  ‘இந்தப் பிரச்சினையில் முதலமைச்சரின் தீர்ப்பு என்ன?’