தமிழ் தர்மசங்கடம் யின் அர்த்தம்

தர்மசங்கடம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  தன் முன் உள்ள வேறுபாடு இல்லாத இரு வழிகளில் அல்லது நபர்களில் எதை அல்லது யாரைத் தேர்ந்தெடுப்பது அல்லது ஆதரிப்பது என்ற குழப்பம்.

  ‘தேர்தலில் போட்டியிடும் இருவருமே என் நண்பர்களாதலால் யாருக்கு ஆதரவு தருவது? தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டேன்’

 • 2

  உண்மையை ஒப்புக்கொள்வது, மறுப்பது, வெளிப்படுத்துவது முதலிய சந்தர்ப்பங்களில் ஏற்படும் கூச்ச உணர்வு; கூச்சம் கலந்த தயக்கம்.

  ‘‘ஒரு கதைக்கு நீங்கள் பத்தாயிரம் ரூபாய் கேட்கிறீர்களே?’ என்ற கேள்வி எழுத்தாளரை மிகவும் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது’

 • 3

  சாதகமான வாய்ப்பு அனைத்தும் இல்லாமல்போனதால் அவ்வளவு சிறப்பாக அமையாத மாற்று வழியை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டு.

  ‘சிறந்த ஆட்டக்காரர்கள் போட்டியில் பங்கேற்க முடியாததைத் தெரிவித்துவிட்டதால் இளம் ஆட்டக்காரர்களை நம்பியிருக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை’