தமிழ் தர்மம் யின் அர்த்தம்

தர்மம்

பெயர்ச்சொல்

 • 1

  (நீதி நூல்களின் அல்லது மரபுகளின் அடிப்படையில்) வாழ்க்கையில் ஒருவர் கடைப்பிடிக்க வேண்டியது; ஆசாரம்.

  ‘மனித குலத்திற்கே உரிய தர்மம்’

 • 2

  நீதிக்கு உட்பட்டது; நியாயம்.

  ‘உரிய கூலி கொடுக்காமல் வேலை செய்யச் சொல்வது தர்மமா?’

 • 3

  (தொழில் முதலியவற்றில்) பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறை.

  ‘பத்திரிகைகளுக்கு என்று ஒரு தர்மம் இருக்கிறது’
  ‘போரில் சரணடைந்துவிட்டவர்களைத் தக்க மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பது யுத்த தர்மம்’

 • 4

  இரக்கம், கருணை ஆகியவற்றின் காரணமாகப் பிறருக்குச் செய்யும் உதவி.

  ‘தர்ம காரியத்திற்குச் சொத்தைச் செலவழித்தார்’
  ‘நான் உன்னிடம் தர்மம் கேட்கவில்லை. கொடுத்த பணத்திற்கு நல்ல பொருளாகக் கொடு என்கிறேன்’
  ‘நான் தர்மம் கேட்கிறமாதிரி பேசுகிறீர்களே. கடன் கொடுத்த பணத்தைத்தானே திருப்பிக்கேட்கிறேன்’