தமிழ் தீர்மானம் யின் அர்த்தம்

தீர்மானம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும்) உறுதியான கருத்து அல்லது முடிவு.

  ‘உன்னுடன் சிறிது நேரமே பேசிக்கொண்டிருந்த ஒருவரைப் பற்றி எப்படி ஒரு தீர்மானத்திற்கு வந்தாய்?’

 • 2

  (ஓர் அமைப்பின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்) கருத்துகள் அல்லது முடிவுகள் அடங்கிய திட்டம்.

  ‘போராட்டம் நடத்துவது என்ற தீர்மானத்தைக் கட்சிச் செயற்குழு அங்கீகரித்தது’
  ‘ஊதிய உயர்வு கேட்பது என்ற தீர்மானம் தொழிற்சங்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது’

 • 3

  ஒரு முடிவில் காணப்படும் உறுதித் தன்மை.

  ‘என்னால் இனிமேல் இங்கு வேலை பார்க்க முடியாது என்று தீர்மானமாகக் கூறினார்’
  ‘திருமணம் தற்போது வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்’
  ‘மேலே படிக்கப்போவதில்லை என்பதுதான் உன்னுடைய தீர்மானமான முடிவு என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை’

தமிழ் தீர்மானம் யின் அர்த்தம்

தீர்மானம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  கோர்வை.