தமிழ் தீர்மானி யின் அர்த்தம்

தீர்மானி

வினைச்சொல்தீர்மானிக்க, தீர்மானித்து

 • 1

  (ஒன்றை) முடிவுசெய்தல்.

  ‘சாலையைக் கடக்கத் தீர்மானித்தவன் எதிரே பேருந்து வருவதைப் பார்த்ததும் நின்றான்’
  ‘உறுப்பினரைப் பதவியிலிருந்து நீக்குவது என்று வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட்டது’
  ‘நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று நீதிபதி அல்லவா தீர்மானிக்க வேண்டும்?’
  உரு வழக்கு ‘இன்றைய ஆட்டத்தின் முடிவை வானிலைதான் தீர்மானிக்கும்போல் இருக்கிறது’

 • 2

  (அளவு, தரம், தன்மை போன்றவற்றை) நிர்ணயித்தல்.

  ‘ஒவ்வொரு மாநிலத்திற்கும் இவ்வளவு நிதி என்று மத்திய அரசு தீர்மானிக்கிறது’
  ‘மின்னணுப் பொருள்களின் மீதான விற்பனை வரியைத் தீர்மானிக்க நிபுணர் குழு கூடியது’