தமிழ் தரவு யின் அர்த்தம்

தரவு

பெயர்ச்சொல்

 • 1

  (ஆய்விற்கு ஆதாரமாகத் திரட்டப்படும்) அடிப்படைத் தகவல்.

  ‘இந்திய அளவில் தொகுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை’
  ‘தரவு வங்கி’

தமிழ் தீர்வு யின் அர்த்தம்

தீர்வு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு பிரச்சினை, சிக்கல் முதலியவற்றை) தீர்க்கும் வகையில் அல்லது அவற்றுக்கு முடிவு காணும் வகையில் அமையும் வழிமுறை; முடிவு.

  ‘ஒரு அரசியல் பிரச்சினைக்கு அரசு ராணுவ நடவடிக்கைமூலம் தீர்வு காண முயல்வது தவறு என்று அவர் குறிப்பிட்டார்’
  ‘பண நெருக்கடிக்கு ஒரு தீர்வு காண வேண்டும்’

 • 2

  கணிதம்
  கொடுக்கப்படும் கணக்குக்கான விடை.