தமிழ் தரவை யின் அர்த்தம்

தரவை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பயிர் செய்ய முடியாத உவர் நிலம்; தரிசு.

  ‘தரவைக்குக் கொண்டுபோய் மாடுகளை மேய விடு’
  ‘கன காலம் தரவையாகக் கிடந்த நிலம் இது’
  ‘மழையே இல்லாததால் வயல் தரவையாகப் போயிற்று’

தமிழ் தீர்வை யின் அர்த்தம்

தீர்வை

பெயர்ச்சொல்

 • 1

  வரி.

  ‘புதிய வரவுசெலவுத் திட்டத்தில் நுகர்பொருள்களின் மீதான தீர்வை குறைக்கப்பட்டிருக்கிறது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு சுங்கவரி.