தமிழ் தருணம் யின் அர்த்தம்

தருணம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைச் செய்வதற்கு உரிய அல்லது குறிப்பிட்ட நிலையில், தன்மையில் அமைந்த) நேரம்; சமயம்.

  ‘ஊதிய உயர்வுபற்றிய அரசு முடிவு தக்க தருணத்தில் அறிவிக்கப்படும்’
  ‘அந்தக் கொள்ளையர்களை வளைத்துப் பிடிக்க இதுதான் சரியான தருணம்’
  ‘மகிழ்ச்சியான தருணங்களில் அப்பாவிடம் எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கலாம்’

 • 2

  வாய்ப்பு.

  ‘விலை மலிவாகக் கிடைக்கிற இந்தத் தருணத்தை நழுவவிடாதீர்கள்’
  ‘அரிய தருணம்’