தமிழ் தரை யின் அர்த்தம்

தரை

பெயர்ச்சொல்

 • 1

  பூமியின் மேல்பரப்பான கடினப் பகுதி/(கட்டடம் போன்றவற்றில்) கல், மண் முதலியவற்றால் கெட்டிப்படுத்தப்பட்ட கீழ்ப் பகுதி; தளம்.

  ‘வீட்டின் எதிரே சிலர் நின்றிருந்தார்கள்; சிலர் தரையில் உட்கார்ந்திருந்தார்கள்’
  ‘குளியல் அறையில் தரை வழுக்குகிறது’
  ‘களிமண் தரை’
  ‘சிமிண்டு தரை’
  ‘வீட்டின் தரையில் ஏகப்பட்ட வெடிப்புகள்’

 • 2

  (குளம், ஆறு, கடல் முதலியவற்றில்) நீரின் அடியில் இருக்கும் நிலப் பகுதி.

  ‘கோடையில் கிணற்றில் நீர் வற்றித் தரை தெரிய ஆரம்பித்துவிடும்’