தமிழ் தர்மத்துக்கு யின் அர்த்தம்

தர்மத்துக்கு

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (வேலை முதலியவற்றைக் குறிக்கும்போது) இலவசமாக; (இலவசமாகச் செய்வதைப் போல) எந்த விதக் கவனமும் இல்லாமல்.

  ‘தர்மத்துக்கு வேலை செய்வதுபோல் அல்லவா வேலை செய்கிறாய்!’

 • 2

  பேச்சு வழக்கு (சம்பளம், கூலி முதலியவற்றைக் குறிக்கும்போது) வேலைக்காக அல்லாமல் இனாமாக; சும்மா.

  ‘தர்மத்துக்கா கூலி தருகிறார்கள்; இன்னும் அதிகமாகக் கேட்க வேண்டியதுதானே?’

 • 3

  பேச்சு வழக்கு (பயிர், வாகனம் முதலியவற்றைக் குறிக்கும்போது) எந்த விதப் பராமரிப்பும் இல்லாமல்; இருக்கிற நிலையிலேயே.

  ‘எண்ணெய்கூடப் போடுவதில்லை; சைக்கிள் தர்மத்துக்கு ஓடிக்கொண்டிருக்கிறது’