தமிழ் தற்காப்பு யின் அர்த்தம்

தற்காப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (தாக்குதலிலிருந்து) பாதுகாத்துக்கொள்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கை.

  ‘உரிய அனுமதி பெற்றுத் தற்காப்பிற்காகக் கைத்துப்பாக்கி வைத்திருந்தார்’
  ‘காவல்துறையினர் தற்காப்புக்காகச் சுட்டதில் இருவர் இறந்தனர்’
  ‘எல்லைப் பிரச்சினையால் நாட்டின் தற்காப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன’

 • 2

  (விளையாட்டில்) எதிர் அணியின் தாக்குதலைத் தடுத்து ஆடும் முறை.

  ‘தமிழக அணி தற்காப்பு ஆட்டத்திலேயே கவனம் செலுத்தியதால் ஆட்டம் சுவாரஸ்யமாக இல்லை’