தமிழ் தற்கொலை யின் அர்த்தம்

தற்கொலை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) தன் உயிரைத் தானே போக்கிக்கொள்ளும் செயல்.

    ‘இது கொலையா தற்கொலையா என்று தெரியவில்லை’
    ‘மேலை நாடுகளை முன்மாதிரியாகக் கொண்டு எல்லா விஷயத்திலும் அவற்றைப் பின்பற்றுவது தற்கொலைக்குச் சமம்’
    உரு வழக்கு ‘‘கூட்டணி வேண்டாம்’ என்று நீங்கள் முடிவெடுத்தது அரசியல் தற்கொலை என்று பலர் கருதுகின்றனர்’