தலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தலை1தலை2

தலை1

பெயர்ச்சொல்

 • 1

  உடலின் மேல்பகுதியில் கண், வாய் முதலிய உறுப்புகள் உள்ள பகுதி.

  ‘கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடி’
  ‘கசாப்புக் கடையில் விற்கும் ஆட்டுத் தலை’

 • 2

  (தலையிலுள்ள) முடி.

  ‘அம்மாவிடம் தலை சீவிக்கொண்டாள்’
  ‘தலைக்கு எண்ணெய் தடவ மாட்டாயா?’

 • 3

  (சில பொருள்களில்) கூரிய முனைக்கு மறுமுனை.

  ‘குண்டூசியின் தலை’

 • 4

  (பிற சொற்களோடு இணைந்து வரும்போது) முதலாவது.

  ‘தலைப் பிள்ளை’
  ‘தலைப் பிரசவம்’

தலை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தலை1தலை2

தலை2

பெயர்ச்சொல்

 • 1

  (இந்திய நாணயத்தில்) சிங்கத்தின் உருவம் பதிக்கப்பட்டிருக்கும் பக்கம்.

  ‘பூவா தலையா போட்டுப்பார்த்து முடிவு செய்வோம்’