தமிழ் தலைகீழ் யின் அர்த்தம்

தலைகீழ்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (முன்பு இருந்தவற்றுக்கு அல்லது சொல்லப்பட்டதற்கு) முற்றிலும் மாறு; நேரெதிர்.

  ‘அலுவலகத்தில் இப்படி ஒரு தலைகீழ் மாற்றம் நிகழும் என்று நான் எதிர்பார்க்கவில்லை’
  ‘செய்யச் சொன்ன வேலையை இப்படித் தலைகீழாகச் செய்திருக்கிறாயே!’

 • 2

  ஒன்றையும் விட்டுவிடாத முறை.

  ‘வீட்டைத் தலைகீழாகப் புரட்டிவிட்டேன்; காணாமல் போன மோதிரம் கிடைக்கவில்லை’

 • 3

  எந்த வரிசையில் எப்படிக் கேட்டாலும் சொல்லக் கூடிய அளவுக்கு மனப்பாடமாகத் தெரிந்துவைத்திருக்கும் நிலை.

  ‘இந்த விதிமுறைகளெல்லாம் அவனுக்குத் தலைகீழாகத் தெரியும்’