தமிழ் தலைகீழாக நில் யின் அர்த்தம்

தலைகீழாக நில்

வினைச்சொல்நிற்க, நின்று

  • 1

    (ஒன்று செய்யப்பட வேண்டும் என்று) மிகுந்த பிடிவாதத்துடன் இருத்தல்; சகலவிதமான முயற்சிகளையும் செய்துபார்த்தல்.

    ‘ஊருக்குப் போக வேண்டும் என்று நீதானே தலைகீழாக நின்றாய்?’
    ‘நீ தலைகீழாக நின்றாலும் அந்தக் கல்லூரியில் இடம் வாங்க முடியாது’