தமிழ் தலைகாட்டு யின் அர்த்தம்

தலைகாட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

 • 1

  (பலரும் அறியும்படியாகவும் சிறிது நேரமே இருக்கும்படியாகவும்) ஒரு இடத்துக்குப் போதல்.

  ‘அலுவலகம் போகும் வழியில் கல்யாண வீட்டில் தலைகாட்டிவிட்டுப் போய்விடுகிறேன்’

 • 2

  (திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில்) சிறிய பாத்திரத்தில் தோன்றுதல்.

  ‘இவர் ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டியிருக்கிறார்’

 • 3

  காணப்படத் தொடங்குதல்.

  ‘நகரங்களில் மீண்டும் கண் நோய் தலைகாட்டியிருக்கிறது’
  உரு வழக்கு ‘அவருடைய சிறுகதைகளில் விரக்தி தலைகாட்டாமல் இருப்பதில்லை’

 • 4

  (இருக்கும் இடத்தை விட்டு) வெளியில் வருதல்; கிளம்புதல்.

  ‘கடன்காரனுக்கு பயந்துகொண்டு ஊரில் அவர் தலைகாட்டுவதே இல்லை’
  ‘நகரில் கலவரமாக இருப்பதால் எங்கும் தலைகாட்ட முடியவில்லை’

 • 5

  (ஊரில் பிறர் மதிக்கும்படி) போய்வருதல்.

  ‘உன் மகன் பண்ணிய காரியத்தால் ஊரில் தலைகாட்ட முடியவில்லை’