தமிழ் தலைசுற்று யின் அர்த்தம்

தலைசுற்று

வினைச்சொல்-சுற்ற, -சுற்றி

 • 1

  (சுய உணர்வை இழக்கச் செய்யும் வகையில்) சுற்றியுள்ள பொருள்கள் சுழல்வதைப் போன்ற மயக்க உணர்வு ஏற்படுதல்.

  ‘முதல்முறையாகப் புகையிலை போட்டேன். தலைசுற்றிக் கீழே விழுந்துவிட்டேன்’

 • 2

  (ஒன்றும் புரிபடாததால்) குழப்பம் உண்டாதல்.

  ‘நீ சொல்கிற கணக்கைக் கேட்டால் எனக்குத் தலைசுற்றுகிறது’
  ‘தலைசுற்றுகிற அளவுக்கு இந்த நூலில் புள்ளிவிவரங்கள் தரப்பட்டுள்ளன’