தமிழ் தலைதூக்கு யின் அர்த்தம்

தலைதூக்கு

வினைச்சொல்-தூக்க, -தூக்கி

 • 1

  (அடங்கியிருந்த உணர்வு, போக்கு) மீண்டும் வெளிப்படுதல்.

  ‘சாதி உணர்வுகள் தலைதூக்கவிடக் கூடாது’
  ‘கட்சிக்குள் எதிர்ப்பு உணர்வு தலைதூக்கியிருக்கிறது’

 • 2

  சற்று மேல்நிலைக்கு வருதல்.

  ‘மூத்த பிள்ளை சம்பாதிக்கத் தொடங்கிய பிறகுதான் குடும்பம் தலைதூக்கியிருக்கிறது’