தமிழ் தலைநிமிர் யின் அர்த்தம்

தலைநிமிர்

வினைச்சொல்-நிமிர, -நிமிர்ந்து

  • 1

    (மதிப்புடைய நிலையை அடைந்து) பெருமைப்படுதல்; (பெருமைப்படத் தக்க அளவில்) மதிப்புடைய நிலைக்கு வருதல்.

    ‘உலக அரங்கில் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் ஆகும்’
    ‘நசிந்த நிலையிலிருந்த பல கிராமியக் கலைகள் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றன’