தமிழ் தலைபோ யின் அர்த்தம்

தலைபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (ஒருவருக்கு) பெரும் ஆபத்து ஏற்படுதல்.

    ‘எதற்கு இப்படி அவசரமாக வரச் சொன்னாய்? ஏதாவது தலைபோகிற விஷயமா?’
    ‘இன்று பணம் கட்டாவிட்டால் தலைபோய்விடாது. கவலைப்படாமல் இரு’
    ‘தலைபோனாலும் சரி, உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்’