தமிழ் தலைமறைவாகு யின் அர்த்தம்

தலைமறைவாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

  • 1

    (காவல்துறையினரால் அல்லது எதிரிகளால் பிடிக்கப்பட்டுவிடும் சாத்தியம் இருக்கும்போது) கண்டுபிடிக்க முடியாதபடி ஒளிந்துகொள்ளுதல்.

    ‘அலுவலகப் பணத்தைக் கையாடிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார்’
    ‘கட்சி தடைசெய்யப்பட்டதை அறிந்த அதன் தலைவர்கள் தலைமறைவானார்கள்’