தலைமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தலைமை1தலைமை2

தலைமை1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு நிர்வகிக்கும் வகையில் அல்லது ஒன்றை முன்னின்று நடத்தும் வகையில்) அதிகாரங்கள் நிறைந்த நிலை.

  ‘அவர் கட்சிக்குத் தலைமை ஏற்க மறுத்துவிட்டார்’
  ‘ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு குடியரசுத் தலைவரிடம் உள்ளது’
  ‘அரசு அளிக்க முன்வந்த சலுகைகளைத் தொழிற்சங்கத் தலைமை ஏற்கவில்லை’

தலைமை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தலைமை1தலைமை2

தலைமை2

பெயரடை

 • 1

  பல பிரிவுகளில் பலவிதப் பொறுப்புடையவர்களை நிர்வகிக்கும் முதன்மைப் பொறுப்புடைய/பல கிளைகளைத் தன் நிர்வாகப் பொறுப்பின் கீழுடைய.

  ‘தலைமைத் தேர்தல் அதிகாரி’
  ‘தலைமை அஞ்சல் நிலையம்’