தமிழ் தலையசை யின் அர்த்தம்

தலையசை

வினைச்சொல்-அசைக்க, -அசைத்து

  • 1

    (ஒருவர் தன்) சம்மதத்தைத் தெரிவித்தல்.

    ‘நான் வியாபாரத்தில் இறங்குகிறேன் என்று ஒரு மாதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இன்னும் என் அப்பா தலையசைக்க மாட்டேன் என்கிறார்’
    ‘சரியோ தவறோ, கட்சியின் மூத்த தலைவர்கள் எதைச் சொன்னாலும் தலையசைக்கத்தானே வேண்டியிருக்கிறது?’