தமிழ் தலையில் அடித்துக்கொள் யின் அர்த்தம்

தலையில் அடித்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (நெற்றியில் லேசாகக் கையால் அடித்துக்கொள்வதன் மூலம் ஒருவரின் செயலில் அல்லது போக்கில் தனக்குள்ள) கடும் அதிருப்தியை வெளிப்படுத்துதல்.

    ‘வீடு இருக்கும் லட்சணத்தைப் பார்த்து விட்டு என் அம்மா தலையில் அடித்துக்கொண்டாள்’
    ‘அவன் எழுதியிருக்கும் ஆங்கிலத்தைப் படித்தால் எனக்குத் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது’