தமிழ் தலையில் கட்டு யின் அர்த்தம்

தலையில் கட்டு

வினைச்சொல்கட்ட, கட்டி

 • 1

  (தனக்கு விருப்பம் இல்லாத வேலையை மற்றொருவர்) செய்யும்படியாக வைத்தல்; (தேவையற்ற பொறுப்பையோ குறைபாடு உடையதையோ) ஏற்கச் செய்தல்.

  ‘ரேஷன் கடைக்குப் போகும் வேலையை யார் தலையில் கட்டலாம் என்று யோசிக்கிறாயா?’
  ‘நீ சற்று அசந்தால் கடைக்காரன் அழுகல் தக்காளியை உன் தலையில் கட்டிவிடுவான்’
  ‘குழந்தைகளை என் தலையில் கட்டிவிட்டுக் கல்யாணத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள்’
  ‘எல்லாச் செலவையும் என் தலையில் கட்டப்பார்க்கிறாயா?’
  ‘சொத்துக்கு ஆசைப்பட்டு இந்தக் கிழத்தை என் தலையில் கட்டிவிட்டார்கள்’
  ‘ஜாக்கிரதையாக இரு; அவர் மகளை உன் தலையில் கட்டிவிடப்போகிறார்’