தமிழ் தலையில் தட்டிவை யின் அர்த்தம்

தலையில் தட்டிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (வரம்பு மீறி நடந்துகொள்பவரை) கண்டித்து அடக்கிவைத்தல்.

    ‘பெரியவர்கள் என்றுகூடப் பார்க்காமல் இப்படி எதிர்த்துப் பேசுகிறானே. அவனைத் தலையில் தட்டிவைப்பதுதான் நல்லது’
    ‘வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆவதற்குள் துள்ளுகிறான். இப்போதே தலையில் தட்டிவைக்க வேண்டும்’