தமிழ் தலையில் மிளகாய் அரை யின் அர்த்தம்

தலையில் மிளகாய் அரை

வினைச்சொல்அரைக்க, அரைத்து

  • 1

    (ஒருவரை) வாய்ப்பு கிடைக்கும்போது ஏமாற்றுதல்.

    ‘அவர் இனிமையாகப் பேசுகிறாரே என்று பார்க்காதே. கொஞ்சம் அசந்தால் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்’
    ‘நான் ஏமாந்தவன் என்று நினைத்து என் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறாயா?’