தமிழ் தலையெடு யின் அர்த்தம்

தலையெடு

வினைச்சொல்-எடுக்க, -எடுத்து

 • 1

  (பயிர் போன்றவை) துளிர்த்தல்.

  ‘மழை பெய்ததும் காய்ந்துகிடந்த பயிர்கள் தலையெடுக்க ஆரம்பித்தன’
  உரு வழக்கு ‘அண்மைக் காலத்தில் நாட்டில் வன்முறை தலையெடுக்க ஆரம்பித்துள்ளது’

 • 2

  (வாழ்க்கையில்) உயர்வான நிலைக்கு வருதல்.

  ‘நீ தலையெடுத்துதான் நம் குடும்பம் மேலே வர வேண்டும்’
  ‘உன் அப்பா தலையெடுத்த பிறகுதான் ஊரில் நாலு பேர் நம்மை மதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்’