தமிழ் தலையைப் பிய்த்துக்கொள் யின் அர்த்தம்

தலையைப் பிய்த்துக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமல்) குழம்பிப்போதல்.

    ‘இந்தச் சின்னக் கணக்கைப் போடவே இப்படித் தலையைப் பிய்த்துக்கொண்டால் மற்ற கணக்குகளை எப்படிப் போடுவாய்?’

  • 2

    (தொடர்ந்து செய்யும் முயற்சிகள் தோல்வியடையும்போது) கடும் எரிச்சலுக்கு உள்ளாதல்.

    ‘இயந்திரத்தில் எங்கு கோளாறு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறேன்’