தமிழ் தலையை உருட்டு யின் அர்த்தம்

தலையை உருட்டு

வினைச்சொல்உருட்ட, உருட்டி

  • 1

    (சம்பந்தமில்லாத விஷயத்தில் அனாவசியமாக ஒருவரை) தொடர்புபடுத்திக் குறை சொலலுதல்; குற்றம்சாட்டுதல்.

    ‘உங்கள் இருவருக்கு இடையில் பிரச்சினை என்றால் அதற்காக என் தலையை உருட்ட வேண்டுமா?’
    ‘நிதி நிர்வாகத்தில் சம்பந்தப்படாத ஆள் நான். எதற்காக என் தலையை உருட்டுகிறார்கள் என்று தெரியவில்லை’