தமிழ் தலைவி யின் அர்த்தம்

தலைவி

பெயர்ச்சொல்

 • 1

  (பண்டைய இலக்கியங்களில்) முதன்மைப் பெண் பாத்திரம்; காதலி.

  ‘தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடம்’
  ‘காவியத் தலைவி’

 • 2

  (அணி, கட்சி, அமைப்பு, குடும்பம் முதலியவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை) வழிநடத்திச் செல்லும் பெண்.

  ‘கட்சித் தலைவி’
  ‘சங்கத் தலைவி’