தமிழ் தலைவைத்துப் படு யின் அர்த்தம்

தலைவைத்துப் படு

வினைச்சொல்படுக்க, படுத்து

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) (ஒருவருடன்) தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்ளுதல்.

    ‘நான் சொந்த ஊர்ப் பக்கம் தலைவைத்துப் படுத்து இருபது ஆண்டுகளாகிவிட்டது’

  • 2

    (பெரும்பாலும் எதிர்மறையில்) (தொழில் முதலியவற்றை) மேற்கொள்ளுதல்.

    ‘பருத்தி வியாபாரத்தில் ஒரு முறை நஷ்டப்பட்டாகிவிட்டது. இனிமேல் அந்தப் பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டேன்’