தமிழ் தலை உருள் யின் அர்த்தம்

தலை உருள்

வினைச்சொல்உருள, உருண்டு

 • 1

  (ஒருவர் ஒரு பிரச்சினையில் தொடர்புபடுத்தப்பட்டு) குறைகூறப்படுதல்.

  ‘நீதான் அவனை வியாபாரம் செய்யச் சொன்னாயாம். இப்போது அதில் நஷ்டம் வந்துவிட்டது என்று உன் தலை உருண்டுகொண்டிருக்கிறது’
  ‘நான் என்ன செய்தேன் என்று இங்கே என் தலை உருள்கிறது?’

தமிழ் தலை உருள் யின் அர்த்தம்

தலை உருள்

வினைச்சொல்உருள, உருண்டு

 • 1

  (ஒரு பிரச்சினையின் காரணமாக ஒருவர்) தண்டிக்கப்படுதல்.

  ‘இந்த வழக்கில் தன் தலை உருளுமோ என்ற பயம் அவருக்கு வந்துவிட்டது’

 • 2

  (பதவியிலிருந்து) நீக்கப்படுதல்.

  ‘அடுத்து யார் தலை உருளுமோ என்று அமைச்சர்கள் கவலையுடன் இருக்கிறார்கள்’