தமிழ் தளம் யின் அர்த்தம்

தளம்

பெயர்ச்சொல்

 • 1

  (கட்டடம் போன்றவற்றின்) தரை.

  ‘பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட கீழ்த்தளம்’

 • 2

  (கட்டடத்தில் அல்லது கப்பலில்) கீழிருந்து மேலாக ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்திருக்கும் பரப்புகளில் ஒன்று.

  ‘எங்களுடைய அலுவலகம் மூன்றாவது தளத்தில் இருக்கிறது’
  ‘கப்பலின் மேல்தளத்தில் அவருக்கு அறை தரப்பட்டது’
  உரு வழக்கு ‘வாசகன் இயங்கும் தளம் வேறு, கவிஞன் இயங்கும் தளம் வேறு’

 • 3

  விமானம், கப்பல் போன்றவை புறப்பட்டுச் செல்லவும் வந்து நிற்கவும் உரிய வசதிகளுடன் அமைந்திருக்கும் இடம்/ஏவுகணை போன்றவற்றைச் செலுத்தத் தேவையான கட்டமைப்பைக் கொண்ட இடம்.

  ‘இராணுவ தளம்’
  ‘கப்பல் தளம்’
  ‘விமான தளம்’
  ‘ஏவுகணை தளம்’

 • 4

  குறிப்பிட்ட செயல்பாடு நடைபெறும் இடம்.

  ‘படப்பிடிப்புத் தளம்’
  ‘வேலைத் தளம்’