தமிழ் தளர் யின் அர்த்தம்

தளர்

வினைச்சொல்தளர, தளர்ந்து

 • 1

  (பிடி, முடிச்சு முதலியவை) இறுக்கம் இழத்தல்; நெகிழ்தல்.

  ‘அவன் திமிறிப் பார்த்தான். ஆனால் அவருடைய பிடி தளரவில்லை’
  உரு வழக்கு ‘அவருடைய நம்பிக்கை தளர்ந்தது’

 • 2

  (உடல் கட்டு) குலைதல்/(நடை) வேகம் இழத்தல்; தொய்வடைதல்.

  ‘இரண்டு மாதமாகப் படுத்தபடுக்கையாகக் கிடந்ததில் மிகவும் தளர்ந்துபோயிருந்தார்’
  ‘சரிவர உடற்பயிற்சி செய்யாததால் உடல் தளர்ந்துவிட்டது’
  ‘எழுபது வயதாகியும் அவரது நடை தளரவில்லை’

 • 3

  மன உறுதி இழத்தல்; மனம் கலங்குதல்.

  ‘இந்தத் தடவையும் பரீட்சையில் தேறவில்லை என்றதும் தளர்ந்துபோனான்’
  ‘தோல்வியைக் கண்டு தளர்ந்துவிடாதே!’