தமிழ் தளர்த்து யின் அர்த்தம்

தளர்த்து

வினைச்சொல்தளர்த்த, தளர்த்தி

 • 1

  (பிடி, முடிச்சு போன்றவற்றை) இறுக்கம் இழக்கச் செய்தல்; நெகிழச் செய்தல்.

  ‘புழுக்கம் தாங்காமல் பித்தானை அவிழ்த்துச் சட்டையைத் தளர்த்திக்கொண்டார்’
  உரு வழக்கு ‘தன் வேடிக்கையான பேச்சின் மூலம் சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த முயன்றாள்’

 • 2

  (சட்டம், விதிமுறை முதலியவற்றை அவற்றின்) கடுமையான நடைமுறையிலிருந்து விலக்குதல்; தீவிரத்தைக் குறைத்தல்.

  ‘ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது’
  ‘‘புதிய அரசு மதுவிலக்கைத் தளர்த்துமா?’ என்று நிருபர் கேள்வி கேட்டார்’