தமிழ் தள்ளிப்போ யின் அர்த்தம்

தள்ளிப்போ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சி மற்றொரு சந்தர்ப்பத்தில் நடைபெறும் வகையில்) பிந்துதல்; தாமதமாதல்.

    ‘ஏனோ தெரியவில்லை; அவனது திருமணம் மேலும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது’
    ‘பள்ளித் தேர்வுகள் இன்னும் ஒரு மாதம் தள்ளிப்போகலாம்’