தமிழ் தள்ளிவை யின் அர்த்தம்

தள்ளிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

 • 1

  தள்ளிப்போடுதல்.

  ‘நீதிபதி இந்த வழக்குக்கான விசாரணையை அடுத்த மாதத்துக்குத் தள்ளிவைத்திருக்கிறார்’
  ‘பள்ளித் தேர்வுகளை இப்படித் தள்ளிவைத்துக்கொண்டே போவது சரி இல்லை’

 • 2

  (எந்த விதத் தொடர்பும் இல்லாத வகையில் ஒருவரை) விலக்கிவைத்தல்.

  ‘அவன் மனைவியைத் தள்ளிவைத்துவிட்டு இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டானாமே!’
  ‘அந்தக் குடும்பத்தை ஊரை விட்டுத் தள்ளிவைத்திருக்கிறார்கள்’