தமிழ் தள்ளுபடி யின் அர்த்தம்

தள்ளுபடி

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்களின் விற்பனை குறித்து வரும்போது) (குறித்த விலையை விடக் குறைத்து விற்பதன் மூலம் கிடைக்கும்) சலுகை.

    ‘தள்ளுபடி பத்து சதவீதம் என்று அந்தப் புத்தகக் கடையின் முன் அறிவிப்புச் செய்திருந்தார்கள்’

  • 2

    பேச்சு வழக்கு (‘இல்லை’ என்னும் சொல்லுடன் வரும்போது) ஒதுக்கப்படுவது; விலக்கு.

    ‘எந்த வகையான சாப்பாடும் அவருக்குத் தள்ளுபடி இல்லை’