தமிழ் தள்ளுபடிசெய் யின் அர்த்தம்

தள்ளுபடிசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (வழக்கு, மனு, தீர்மானம் முதலியவற்றை ஏற்றுக்கொள்வதற்குத் தகுதி இல்லை என்று) நிராகரித்தல்.

    ‘தன்னைப் பதவிநீக்கம் செய்ததை ஆட்சேபித்து அந்த அதிகாரி தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடிசெய்யப்பட்டது’

  • 2

    (கடன் முதலியவற்றைத் திருப்பி அளிக்க வேண்டாம் என்ற வகையில்) ரத்துசெய்தல்.

    ‘வறட்சி காரணமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடனை அரசு தள்ளுபடிசெய்துவிட்டது’