தமிழ் தள்ளுவண்டி யின் அர்த்தம்

தள்ளுவண்டி

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்களை வைத்து அல்லது ஒரு நபரை உட்காரவைத்து) கையினால் தள்ளிச் செல்லக்கூடிய வகையில் சக்கரங்களை உடைய வண்டி.

  ‘தள்ளுவண்டியில் காய்கறி விற்றுக்கொண்டு வந்தான்’
  ‘விமான நிலையத்தில் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்குத் தள்ளுவண்டி கிடைக்கும்’
  ‘நகரங்களில் குழந்தைகளுக்கான தள்ளுவண்டி வாங்கலாம்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு நடைவண்டி.