தமிழ் தளவாடம் யின் அர்த்தம்

தளவாடம்

பெயர்ச்சொல்

 • 1

  (போர் செய்யத் தேவையான) ஆயுதம் முதலிய சாதனம்.

  ‘போர்த் தளவாடத் தொழிற்சாலை’
  ‘வளர்ச்சியடைந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளுக்குப் பெருமளவில் யுத்தத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கின்றன’

 • 2

  (பொதுவாக) ஒரு தொழிலை அல்லது வேலையைச் செய்யத் தேவையான சாதனம் அல்லது கருவி.

  ‘புதிய வரவுசெலவுத் திட்டத்தில் வீடுகட்டும் தளவாடங்களின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது’