தளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தளை1தளை2

தளை1

பெயர்ச்சொல்

 • 1

  கட்டுப்படுத்தும் தடை; கட்டுப்பாடு.

  ‘மரபு, சம்பிரதாயம் போன்ற எந்தத் தளைகளுக்கும் அவர் தன்னை உட்படுத்திக்கொள்ளாதவர்’
  ‘அன்புத் தளை’

 • 2

  (உலக) பற்று; பிடிப்பு.

  ‘உலகத் தளைகளை விடுத்து அவர் துறவியானார்’

தளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தளை1தளை2

தளை2

பெயர்ச்சொல்

இலக்கணம்
 • 1

  இலக்கணம்
  செய்யுளில் ஒரு சீரின் இறுதி அசைக்கும் அதை அடுத்து வரும் சீரின் முதல் அசைக்கும் உள்ள ஓசை அடிப்படையிலான தொடர்பு.