தமிழ் தழுவல் யின் அர்த்தம்

தழுவல்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரை) தழுவும் செயல்.

  ‘அவளுடைய தழுவலில் அவன் மெய்மறந்தான்’
  ‘தோழியின் தழுவலில் அன்பு வெளிப்பட்டது’

 • 2

  (இலக்கியத்தைக் குறிக்கும்போது) தழுவி உருவாக்கப்படுவது.

  ‘இது ஒரு பிற மொழிப் படத்தின் தழுவல்’
  ‘தழுவல் நாடகம்’