தமிழ் தழுவு யின் அர்த்தம்

தழுவு

வினைச்சொல்தழுவ, தழுவி

 • 1

  (அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவரை) மார்போடு சேர்த்துக்கொள்ளுதல்.

  ‘போட்டியில் பரிசு பெற்ற மகனைத் தாய் கட்டித் தழுவினாள்’
  ‘நீண்ட நாள் கழித்துச் சந்தித்த நண்பனைத் தழுவிக்கொண்டான்’
  உரு வழக்கு ‘தென்றல் உடலைத் தழுவியது’
  உரு வழக்கு ‘மேகம் மலையைத் தழுவிச் சென்றது’

 • 2

  (பிற மதத்தை) ஏற்றுப் பின்பற்றுதல்.

  ‘கலிங்கப் போருக்குப் பின் அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்’

 • 3

  உயர் வழக்கு (தோல்வி, மரணம்) அடைதல்.

  ‘நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைத் தழுவிய கட்சி இது’
  ‘இம்முறை அவர் தோல்வியைத் தழுவுவது நிச்சயம்’
  ‘நாட்டிற்காக மரணத்தைத் தழுவவும் நான் தயார்’

 • 4

  (ஒன்றை) சார்தல்.

  ‘சமயமும் தமிழும் ஒன்றையொன்று தழுவியே வளர்ந்தவை’

 • 5

  (கலைப் படைப்புகளை) ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு அல்லது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்துக்குத் தகுந்த மாற்றங்களோடு அமைத்தல்.

  ‘ஆங்கிலப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் வெற்றி பெறவில்லை’