தழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தழை1தழை2தழை3

தழை1

வினைச்சொல்தழைக்க, தழைத்து

 • 1

  (தளிர், இலை முதலியவை அதிக அளவில் வளர்ந்து) செழித்தல்.

  ‘இலையுதிர் காலத்துக்குப் பிறகு மரங்கள் தழைக்கத் தொடங்கியிருந்தன’
  ‘இவ்வளவு மழை பெய்தும் இந்த மரம் மட்டும் ஏன் தழைக்காமல் இருக்கிறது?’

 • 2

  (குடும்பம், அமைப்பு முதலியவை) சிறப்புடன் வளர்தல்.

  ‘பிள்ளைகள் தலையெடுத்துதான் இந்தக் குடும்பம் தழைக்க வேண்டும்’
  ‘ஜனநாயகம் தழைக்க அனைவரும் பாடுபட வேண்டும்’

தழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தழை1தழை2தழை3

தழை2

வினைச்சொல்தழைக்க, தழைத்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (இருக்கும் நிலையிலிருந்து ஒன்றை) தாழ்த்துதல்; இறக்குதல்.

  ‘ஆசிரியரைக் கண்டதும் வேட்டியைத் தழைத்து விட்டுக்கொண்டான்’

தழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தழை1தழை2தழை3

தழை3

பெயர்ச்சொல்

 • 1

  (சிறு குச்சியோடு கூடிய) இலைக் கொத்து.

  ‘ஆட்டுக்குத் தழை ஒடித்துப் போட்டிருக்கிறேன்’
  ‘வேப்பந்தழையை அரைத்து மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்’