தமிழ் தழைய யின் அர்த்தம்

தழைய

வினையடை

 • 1

  (புடவை அல்லது வேட்டி கட்டியிருப்பதைக் குறிக்கும்போது) தரையைத் தொடும் அளவில்; தரையில் லேசாகப் புரளும் அளவுக்கு.

  ‘பட்டு வேட்டி தழையத்தழைய அவர் நடந்துவந்தார்’
  ‘தழையக் கட்டியிருந்த சேலையை இடுப்பில் தூக்கிச் செருகிக்கொண்டு வேலையைச் செய்யத் தொடங்கினாள்’

 • 2

  (கூந்தல் பின்னியிருப்பதைக் குறிக்கும்போது) இறுக்கமில்லாமல்; தொய்வாக.

  ‘குளித்த பின் கூந்தலைத் தழையக் கட்டிக்கொண்டாள்’