தமிழ் தவணை யின் அர்த்தம்

தவணை

பெயர்ச்சொல்

 • 1

  செலுத்த வேண்டிய மொத்தத் தொகையை ஏதேனும் ஒரு விகிதப்படி பகுத்துக்கொண்டு குறிப்பிட்ட காலத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்தும் முறை.

  ‘நேற்றுதான் இந்த மின்விசிறியைத் தவணை முறையில் வாங்கினேன்’
  ‘வங்கியில் வாங்கிய கடனை முப்பத்தாறு தவணைகளில் செலுத்திவிட வேண்டும்’

 • 2

  (மேற்குறிப்பிட்ட முறையில்) பகுத்துக்கொண்ட கால அளவில் ஒரு முறை.

  ‘மின்விசிறிக்கு இரண்டாவது தவணைப் பணம் கட்ட வேண்டும்’

 • 3

  கால வரம்பு; கெடு.

  ‘வீட்டைக் காலிசெய்வதற்கு ஆறு மாதம் தவணை கேட்டிருக்கிறார்’

 • 4

  வட்டார வழக்கு தடவை.

  ‘எத்தனை தவணைதான் இந்தப் படத்தைப் பார்ப்பது?’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு அமர்வு.

  ‘நாடாளுமன்றத்தை இன்னொரு தவணைக்குத் தொடர்வதற்கான தீர்மானம்’

 • 6

  இலங்கைத் தமிழ் வழக்கு ஒத்திவைப்பு.

  ‘நீதிமன்றத்தில் இந்த முறை சமுகமளிக்க முடியாதபடி இருந்ததால் தவணை கேட்கும்படி சட்டத்தரணியிடம் கூறினேன்’