தமிழ் தவம்கிட யின் அர்த்தம்

தவம்கிட

வினைச்சொல்-கிடக்க, -கிடந்து

 • 1

  (ஓரிடத்தில் அல்லது ஒருவரிடம்) தன் காரியம் நிறைவேறுவதற்காகக் காத்துக்கிடத்தல்.

  ‘ஒரு சான்றிதழ் வாங்க அரசு அலுவலகத்தில் தவம்கிடக்க வேண்டியிருந்தது’
  ‘நடிகரைப் பார்க்க ஒரு கூட்டம் தவம்கிடந்தது’

 • 2

  ஒன்றை அடைய மிகுந்த ஆர்வத்துடன் கடும் முயற்சி மேற்கொள்ளுதல்.

  ‘சினிமாவில் நடிக்கத் தகுந்த வாய்ப்புக் கிடைக்காதா என்று தவம்கிடக்கிறான்’